The Prime News

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (8.7.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதனால் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி (galle) மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோருகிறது.

RSS
Follow by Email
Facebook
X (Twitter)
WhatsApp